Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘போக்கிரி’ விஜய் பாணியில் களமிறங்கும் சந்தானம்

In சினிமா
Updated: 12:29 GMT, Feb 22, 2017 | Published: 12:29 GMT, Feb 22, 2017 |
0 Comments
1408
This post was written by : Shailu

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக களமிறங்கியுள்ளவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவை செய்கின்றார்.

‘அனேகன்’ படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். மேலும் வாசன் விசுவல் வென்சுவர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்நிலையில் சந்தானம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் ‘போக்கிரி’ படத்தில் விஜய்யை போல வருகின்றாராம்.அதாவது, ‘போக்கிரி’ படத்தின் கடைசியில் தான் விஜய் பொலிஸ் அதிகாரி என்று தெரியவரும். அதைபோலவே இந்த படத்திலும் சந்தானம் பொலிஸ் அதிகாரியாக வலம் வருகின்றார்.

இந்த படத்தில் சந்தானம், முதலில் தான் பொலிஸ் என்பதை காட்டிக் கொள்ளாமல், வில்லன்களை கடைசியில் எப்படி வீழ்த்துகிறார் என்பதுபோல் கதையை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg