Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரேபார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 17:49 GMT, Feb 22, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : elayathambi
Bairu

பிரான்சில்  எதிர்வரும்  ஏப்ரலில்  இடம்பெறவுள்ள  ஜனாதிபதி  தேர்தலின் தான் போட்டியிடப் போவதில்லையென   ஜனநாயக  இயக்க கட்சியின் (மொடெம்)  தலைவர் பிரான்சுவா பைரு  இன்று  மாலை அறிவித்துள்ளார்

சிறப்பு   ஊடக மாநாடு  ஒன்றில்  தனது  நிலைப்பாட்டை  அறிவித்த பிரான்சுவா  பைரு  ஜனாதிபதி  தேர்தல்  போட்டிக் களத்தில்  நிற்கும் இமானுவேல்  மக்றோனுக்கு ஆதரவை  வழங்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

suicida.jpg_594723958

சட்டவிரோதக்  குடியேறி  என்ற  அடிப்படையில்  அமெரிக்காவிலிருந்து பலவந்தமாக  நாடு  கடத்தப்பட்ட  மெக்ஸிக்கோவாசி  ஒருவர்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்க  ஜனாதிபதியாக  டொனால் ட் ரம்  பதவியேற்ற பின்னர் சட்டவிரோத  மெக்சிக்கோ  குடியேறிகள்  மீதான  நடவடிக்கைகள் இறுக்கமடைந்துவரும் நிலையில்  இந்தச்  சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

நாடு  கடத்தப்பட்ட  மேற்படி  நபர்  நாடு  கடத்தபட்ட  அரை மணிநேரத்தில் எல்லைப் பகுதியில்  உள்ள  பாலம்  ஒன்னிறிலிருந்து  குதித்துத்  தற்கொலை  செய்துள்ளார்.

trtworld-nid-302835-fid-339534

துருக்கியில்  பெண்  ராணுவ  அதிகாரிகள்  இஸ்லாமிய  மார்க்கத்தில் முக்காடு  அணிவதற்கு  விதிக்கபட்ட  தடை  விலக்கிக்  கொள்ளப்படவுள்ளது.

துருக்கியில்  பொது  நிறுவனங்களில்  பணிபுரியும்  பெண்கள்  முக்காடு அணிவதற்கு  1980 ஆம்  ஆண்டில்  தடை விதிக்கபட்டது.

ஆயினும்  தற்போது  அந்தத்  தடை  படிப்படியாக  நீக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  தற்போது  பெண் ராணுவ  அதிகாரிகளுக்கும் இந்தத் தடை விலக்கிக்  கொள்ளப்படவுள்ளது

_94798740_cressida_getty

லண்டன்  பெருநகர காவற்துறை ( ஸ்கொட்லன்ட்  யாட்)   வரலாற்றில் முதற் தடவையாக  பெண்  ஒருவர்  ஆணையாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை  உதவி  ஆணையாளராக  இருந்த  கிறிசிடா  டிக்  அவர்களே இப்போது  லண்டன்  பெருநகர காவற்துறை  ஆணையாளராக நியமிக்கபட்டுள்ளார்.

இதற்கு முன்னர் பயங்கரவாத  தடுப்புக் காவற் பிரிவை தலைமையேற்றிருந்த கிறிசிடா  டிக்   தன் தற் துணிச்சலையையும் சாதுரியத்தையும் அப்பிரிவில் நிறுவியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg