Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய சமாதான பேச்சுவார்த்தை திருப்புமுனையாக அமையாது: மிஸ்ருரா

In உலகம்
Published: 03:54 GMT, Feb 23, 2017 |
0 Comments
1220
icon_com
This post was written by : Risha

ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் சிரிய அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இன்று (வியாழக்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகும் சமாதான பேச்சுவார்த்தை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்ப்பார்க்கவில்லை என சிரியாவிற்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் ஸ்ரஃபான் டி மிஸ்ருரா தெரிவித்துள்ளார்.

சிரிய சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், சிரியாவில் தொடர்ந்துவரும் மோதலை தடுத்து நிறுத்த இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியல் ரீதியான ஒரு தீர்வை காண்பதற்கு சிரியாவிற்கு மற்றுமொரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதல் சுற்று பேச்சுவார்த்தையில் உடனடி திருப்புமுனை நிகழும் என எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் சிரியாவில் அரசியல் தீர்வின் தேவை குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

இன்றைய பேச்சுவார்த்தையானது இருதரப்பு பேச்சுவார்த்தையாக ஆரம்பிக்கும் என தெரிவித்த அவர், பல சுற்றுக்களாக நடைபெறவுள்ள குறித்த சமாதான பேச்சுவார்த்தையின் குறிக்கோள் தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg