Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலாவது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பம்!

In டெனிஸ்
Updated: 07:05 GMT, Feb 23, 2017 | Published: 04:54 GMT, Feb 23, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Anojkiyan
lav

அவுஸ்ரேலிய டென்னிஸ் ஜாம்பவான் ரொட் லேவரின் நினைவாக நடத்தப்படும், முதலாவது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி செக் குடியரசின் தலைநகரான பிராக்கில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் ஐரோப்பிய அணி, உலக அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய அணிக்கு சுவீடனின் முன்னாள் வீரர் பிஜோர்ன் போர்க்கும், உலக அணிக்கு அமெரிக்காவின் ஜோன் மெக் என்ரோவும் அணித்தலைவர்களாக செயல்படவுள்ளனர்.

இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 9 போட்டிகளும், இரட்டையர் பிரிவில் 3 போட்டிகளும் நடைபெறவுள்ளது. ஒரு நாளைக்கு 4 போட்டிகள் நடத்தப்படும். இதில் 3 ஒற்றையர் பிரிவு போட்டிகளும், ஒரு இரட்டையர் பிரிவு போட்டியும் அடங்கும். ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் இடம் பெறுவார்கள்.

விம்பிள்டன் போட்டிக்கு பிறகு வெளியிடப்படும் ஏ.டி.பி தரவரிசை பட்டியலின் அடிப்படையில் 4 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மீதம் உள்ள இரு வீரர்களை அந்த அணியின் தலைவர்கள் தேர்வு செய்யவுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஆண்டை மட்டும் தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலண்டர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற கடைசி வீரர் ரொட் லேவர்தான். காலண்டர் கிராண்ட்ஸ்லாம் என்பது ஒரே ஆண்டில் நடத்தப்படும் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வெல்வதாகும். இந்த சாதனையை ரொட் லேவர் கடந்த 1969ஆம் ஆண்டு நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg