Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிளம்ஸ் பழத்தின் மருத்துவக் குணங்கள்

In
Updated: 05:09 GMT, Feb 23, 2017 | Published: 05:04 GMT, Feb 23, 2017 |
0 Comments
1312
icon_com
This post was written by : Elakkiya
plums

பார்பதற்கு அழகாகவும், கவர்ந்திழுக்கும் வண்ணத்துடனும் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் இருக்கும் பிளம்ஸ் பழம் பல்வேறு மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் நன்கு விளைச்சலை தரக்கூடிய இந்த பழத்தில், விட்டமின் ஏ, கே, இ, பி1, பி2, பி3 போன்ற விட்டமின் சத்துக்களும், பொட்டாசியம், பொஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கல்சியம், போன்ற தாது உப்புக்களும், நார்சத்துகளும் காணப்படுகின்றன.

இனி பிளம்ஸ் பழத்தின் மருத்துவக் குணங்களை பார்க்கலாம்,

1. கொலஸ்ரோல் அளவினைக் குறைக்க மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க

கொலஸ்ரோல்என்பது கல்லீரல் மற்றும் குடல்களிலிந்து உற்பத்தி செய்யப்படும் மெழுகு போன்ற உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு ஆகும். இந்த கொலஸ்ட்ரோல், கல மென்சவ்வு உருவாக்கத்திற்கும், ஓமோன்கள் உற்பத்திக்கும் அவசியமானது.

மேலும் அது பாலூட்டிகளில் இரத்தத்தில் ஊடுருவிச் செல்லும் தன்மை உடையது. கொலஸ்ரோலின் அளவு கூடும்போது அது இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் நரம்புகளில் படிந்து  இரத்த ஓட்டத்தின் அளவைக் குறைக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. நார்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது அவை கொலஸ்ரோல் உருவாகும் அளவினைக் குறைக்கின்றன.

பிளம்ஸ் அதிக அளவு நார்ச்சத்து கொண்டது. இதனால் இதனை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரோலின் அளவினைக் குறைக்கலாம்.

2. புற்றுநோய்

பிளம்ஸ் பழத்தின் சாற்றில் புற்றுநோய்க்கான சிகிச்சை நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் உள்ள எபிக்கேட்சின் என்ற மூலக்கூறு வீரியமிக்க புற்றுநோய் கலங்களின்  வளர்ச்சி மற்றும் அதன் பெருக்கத்தைத் தடுக்கிறது. கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது.

3. செரிமான மண்டலப் பாதுகாப்பிற்கு

இப்பழம் அதிக நார்ச்சத்துக்களுடன் சார்பிட்டால் மற்றும் இஸாடின் என்ற மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவை செரிமான மண்டலத்தை நன்கு செயற்படச் செய்கின்றன. அத்துடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது.

4. கண்நோயிலிருந்து பாதுகாப்பு

இந்த பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன்கள் ஆரோக்கியமான கண்பார்வையை வழங்குவதோடு வயோதிபத்தால் ஏற்படும் மையப்பகுதி தசை அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது.

5. நோய்எதிர்ப்பு சக்தியைப் பெற

பழத்தில் காணப்படும் விட்டமின் ‘சி’ உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. இதனால் எமது உடல் பல்வேறு தொற்றுக்கள் மற்றும் வீக்கங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்த விட்டமின் சி-யானது உடல் உட்கிரகிக்கும் இரும்புச்சத்தின் அளவினை அதிகரிக்கிறது.

6. மூளையின் நலத்திற்கு
7. மன அழுத்தம் மற்றும் சோர்வினை நீக்க
8. எலும்புகளின் நன்மைக்கு
9. கர்ப்பிணிகளின் நலத்திற்கு

இப்பழத்தில் உள்ள விட்டமின்கள் ஏ,சி,கே, குழந்தையின் கல உருவாக்கத்திற்கும், கண் பார்வைக்கும், எலும்புகளின் பலத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றன. நார்ச்சத்துகள் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.

பிளம்ஸ் உடல்நலத்திற்கு உகந்தது எனினும் எச்சரிக்கையும் அவசியம்

பிளம்ஸில் காணப்படும் ஒருவகை அமிலம்அதிகளவிலபழத்தினை சாப்பிடும்போது, சிறுநீரகத்தில் கற்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg