Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்கள் எளிதாகக் கடைபிடிக்ககூடிய சில அழகுக் குறிப்புக்கள்

In
Updated: 05:21 GMT, Feb 23, 2017 | Published: 05:20 GMT, Feb 23, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Elakkiya
homemade-beauty-tips-oily-skin

வீட்டு வேலைகளுடன் அலுவலக வேலைகளையும் சேர்த்து செய்யும் இன்றைய காலகட்ட பெண்கள் எளிதாகக் கடைபிடிக்ககூடிய சில அழகுக் குறிப்புக்கள்

கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.

பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

கை முட்டிகளில் உள்ள கருமை நீங்க, எலுமிச்சைப்பழத்தின் சாறைத் தேய்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால், பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும்.

கண் இமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளிகள் விட்டுத் தூங்கினால், கண் இமை கருப்பாக நீண்டு வளரும்.
குளித்தபின் கைகளில், கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.

உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் மென்மையாக மாறும்.

களைப்படைந்த கால்களை மிதமான உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்து, பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி தூங்கினால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை, காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற்றைக் கலந்து, கொதிக்கவைத்து, பின்னர் ஆற விடவும். இதனை தினமும் கூந்தலுக்குத் தடவிவர கூந்தல் கருமையாக, பளபளப்பாக மாறும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg