Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல்: 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

In இந்தியா
Updated: 05:34 GMT, Feb 23, 2017 | Published: 05:33 GMT, Feb 23, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Shailu
UP-Election

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலின் 53 தொகுதிகளுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.இதனையடுத்து, 4ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 53 தொகுதிகளிலும், தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

53 தொகுதிகளிலும் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 1 கோடியே 84 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதற்காக 19,487 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு,   200 துணை இராணுவத்தினர் உட்பட 2 இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 4ஆம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 53 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg