Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனி அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது புனே அணியின் உள்விவகாரம்: சேவாக்

In கிாிக்கட்
Updated: 06:28 GMT, Feb 23, 2017 | Published: 06:21 GMT, Feb 23, 2017 |
0 Comments
1547
icon_com
This post was written by : Anojkiyan
netherlands-virender-practice-session-captain-mahendra-cricket_f1871986-f90f-11e6-aa44-d0b605bc50f5

ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து டோனி, நீக்கப்பட்டிருப்பது புனே அணியின் உள்விவகாரம் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர்களில் டோனியே தலைசிறந்தவர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அது மிக வேதனையான முடிவு. அவர் அணித்தலைவராக இல்லாததால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இனி புனே அணியை எங்களுடைய பஞ்சாப் அணி வீழ்த்த முடியும். என கூறினார்.

ஐ.பி.எல் தொடர் தொடங்கியதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருந்த டோனி கடந்த வருடத்துக்கு முந்தைய வருடம் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, புதிதாக தொடரில் இணைக்கப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இந்த ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில், இடம்பெற்றுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து டோனி அதிரடியாக நீக்கப்பட்டு. அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அணிதலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், டோனி அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை, இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் இதை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg