Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.க – அ.தி.மு.க இல்லாத தமிழகம் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

In இந்தியா
Updated: 06:16 GMT, Feb 23, 2017 | Published: 06:16 GMT, Feb 23, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Shailu
Pon Radhakrishnan

தி.மு.க – அ.தி.மு.க கழகங்கள் இல்லாத தமிழகம், எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (வியாழக்கிழமை) கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘சட்டசபையில் செய்த தவறுகளை மறைப்பதற்காக தி.மு.க உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

என்னை பொறுத்தவரை தி.மு.க மற்றும் அ.தி.மு.க கழகங்கள் இல்லாத தமிழகம், எதிர்காலத்தில் நன்றாக இருக்கும். இரண்டு கழகங்களாலும் எந்த முன்னேற்றமும் எந்த காலத்திலும் வரப்போவது கிடையாது.

சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

தன்னுடைய பொறுப்பை காப்பாற்றிக் கொள்வதற்கு கொடுக்க கூடிய கவனத்தை இவ்வாறான விடங்களுக்கு கொடுக்கும் பட்சத்தில், பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

இரண்டு கழகங்களையும் ஒழித்துக்கட்ட மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் ஸ்டாலின் ஒரு தரப்பை மட்டும் குற்றம்சாடி வருகின்றார். எந்த வழியில் முயன்றாலும் தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை வரப்போவது கிடையாது.

இத்தனை ஆண்டுகளாக தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மக்கள் வாய்ப்புகளை கொடுத்து முடித்து விட்டார்கள். இனி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் எந்த பிரிவையும் மக்கள் ஏற்பதற்கு தயாராகயில்லை.

மேலும் தமிழகத்தில் பல மாதங்களாக அரசாங்கமே செயல்படவில்லை. மக்களை ஏமாற்றும் வகையில் இவ்வளவு நாளும் ஒரு அரசாங்கம் செயற்பட்டு வந்துள்ளது.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg