Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாணய சுழற்சியில் வெல்வது மட்டுமே வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதில்லை: லீ மேன்

In கிாிக்கட்
Published: 06:58 GMT, Feb 23, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Anojkiyan
lehmann-m

பொதுவாக இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டு அணிகள் நாணய சுழற்சியில் வெல்வதை ஒரு மிகப்பெரிய காரணியாகக் காட்டுவதுண்டு, ஆனால், இவ்வாறு நாணய சுழற்சியில் வெல்வது மட்டுமே வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதில்லை என அவுஸ்ரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலிய அணி, இன்று முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில், இந்திய ஆடுகளங்களில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என பல முன்னாள் வீரர்கள் கருதுகின்ற நிலையில், அதனை பயிற்சியாளர் டேரன் லீ மேன், மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘கடந்த முறை இந்தியாவில் 4 முறையும் நாணய சுழற்சியில் வென்றோம் ஆனால் தொடரை 4-0 என்று இழந்தோம் எனவே நாணய சுழற்சியில் வெல்வது மட்டுமே வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதில்லை.

நாணய சுழற்சியில் வென்றாலும் நன்றாக விளையாடவேண்டும் என்பதே முக்கியம். என்னைப் பொறுத்தவரை நாணய சுழற்சியில் வெல்வது எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சாதகமாக இருந்து விட்டு போகட்டும், அவுஸ்ரேலியாவில் விளையாடினாலும் இதுதான் என் பார்வை.

எனவே இந்தியா நல்ல ஆடுகளங்களை உருவாக்கும் என்றே நம்புகிறேன், 5 நாட்கள் தாங்கும் நல்ல ஆடுகளங்கள் என்று கூறுகிறேன்’ என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg