Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் சௌத்பார் பகுதியில் எரிந்த நிலையில் முச்சக்கர வண்டி மீட்பு

In இலங்கை
Published: 06:52 GMT, Feb 23, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Ravivarman

மன்னார் சௌத்பார் பகுதியில்  முச்சக்கர வண்டியை முழுமையாக எரிந்த நிலையில்  பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) மீட்டுள்ளனர்.

கடற்படையினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் முழுமையாக எரிந்த நிலையில் காணப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் குறித்த முச்சக்கர வண்டிக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை எனவும், அது தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

DSC_0028 DSC_0016 (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg