Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லேவர் டென்னிஸ் தொடரில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட ரோஜர் பெடரர் விருப்பம்!

In டெனிஸ்
Published: 07:44 GMT, Feb 23, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Anojkiyan
lav

லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாட ரோஜர் பெடரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய வீரர்களுக்கும், உலக அணி வீரர்களுக்கும் இடையிலான முதலாவது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கான அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ரோஜர் பெடரர் கூறும்போது, ‘லேவர் கோப்பை டென்னிஸ் கண்காட்சிப் போட்டி இல்லை. இது மிகவும் சவாலாக இருக்கும். இதன் இரட்டையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட ஆவலாக இருக்கிறேன். நான் எப்பாதும் நடாலுடன் விளையாட விரும்புவேன்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg