Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியரை நியமிக்கக்கோரி கிராம மக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 08:17 GMT, Feb 23, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Ravivarman
IMG-20170223-WA0004

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள ஏறாவூர் மீராகேணி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் (Primary Medical Care Unit) நீண்ட காலமாக வைத்தியர்கள் கடமைக்கு வராததால் கிராம மக்கள் இன்று (வியாழக்கிழமை) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் கடமையில் இருந்த வைத்தியர் மாற்றலாகிச் சென்ற பின்னர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சுழற்சி முறையில் கடமை புரிந்தனர். எனினும் தற்போது குறித்த சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் மீராகேணி, ஐயன்கேணி, தாமரைக்கேணி, சத்தாம்ஹுஸைன், மிச்நகர், முஹாஜிரீன் கிராமம், சவுக்கடி, சின்னச்சவுக்கடி, தளவாய் போன்ற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை எழுத்து மூலம் விடுத்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வைத்தியர்கள் வருகை தராத காரணத்தினால் நாளாந்தம் சிகிச்சைக்காக சமூகமளிக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விசனத்துடன் திரும்பிச் செல்லும் அதேவேளை குறித்த வைத்தியநிலையம் அமைந்துள்ள பிரதேசம் டெங்கு அச்சுறுத்தலுக்குள்ளான பிரதேசமாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.

IMG-20170223-WA0005 IMG-20170223-WA0007

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg