Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன பிரதமரை இன்று சந்தித்தார் இத்தாலி ஜனாதிபதி

In ஐரோப்பா
Published: 11:04 GMT, Feb 23, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Risha

சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இத்தாலி ஜனாதிபதிக்கும், சீன பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) பீஜிங்கில் இடம்பெற்றது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இதேவேளை, இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது, இரு நாட்டிற்கும் இடையே மூலோபாய, வர்த்தக மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், சீனா மற்றும் ஐரோப்பாவுடனான உறவை வலுப்படுத்த இத்தாலி மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று இதன்போது இத்தாலி ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவிற்கு விஜயம் செய்த இத்தாலி ஜனாதிபதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு தங்கியிருப்பார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg