Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனுஷ்கோடியில் ஈழத்து அகதி கைது

In இந்தியா
Updated: 11:43 GMT, Feb 23, 2017 | Published: 11:43 GMT, Feb 23, 2017 |
0 Comments
1078
icon_com
This post was written by : Shailu

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு கடற்கரை பகுதிக்கு படகில் வந்த இலங்கை அகதி ஒருவர் நேற்று (புதன்கிழமை) உளவுப்பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி தனுஷ்கோடி கடற்கரையில் படகு ஒன்று கரை ஒதுங்கியதையடுத்து, குறித்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதில், குறித்த நபர் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிதாஸ் என்று தெரியவந்துள்ளது.

மண்டபம் அகதிகள் முகாமில் 17 ஆண்டுகளாக வசித்து வந்த அந்தோணிதாஸ், இலங்கை சென்று, மீண்டும் கடந்த 15ஆம் திகதி படகில் புறப்பட்டு 16ஆம் திகதி தனுஷ்கோடிக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்தோடு, மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ள அவர், அங்குள்ள ஒருவரை சந்தித்து விட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து, அந்தோணிதாஸை கைது செய்துள்ள பொலிஸார் தொடர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg