Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீத் நொயார் தாக்குதல் சம்பவம்: அடையாள அணிவகுப்பு நடத்துமாறு உத்தரவு

In இலங்கை
Updated: 11:13 GMT, Feb 23, 2017 | Published: 11:11 GMT, Feb 23, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Keith-Noyahr

சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐவருள் மூன்று சந்தேகநபர்களை இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம இவ் உத்தரவை பிறப்பித்தார்.

குறித்த அடையாள அணிவகுப்புக்கு மேலதிகமாக வேறு அடையாள அணிவகுப்புகள் நடத்தப்பட மாட்டாதென தெரிவித்த மேலதிக நீதவான் லோச்சனா, குறித்த அடையாள அணிவகுப்பு நடைபெறும் தினத்தன்று ஊடகவியலாளர் கீத் நொயார் பிரசன்னமாகவேண்டுமென உத்தரவிட்டார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த 17ஆம் திகதி ராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட மூன்று ராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த 19ஆம் திகதி இரு ராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டதோடு, அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக, கடந்த அரசாங்கத்தில் புலனாய்வுப் பிரிவில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் சந்தேகிக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg