Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியா அணியை முதல் நாளிலேயே ஆட்டம் காண வைத்தது இந்தியா!

In கிாிக்கட்
Published: 12:05 GMT, Feb 23, 2017 |
0 Comments
1556
icon_com
This post was written by : Anojkiyan
CRICKET-IND-AUS

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அவுஸ்ரேலியா அணி, 9 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றுள்ளது.

புனேயில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வோர்னர் மற்றும் ரென்சோவ் மட்டுமே அணிக்காக குறிப்பிடதக்க ஓட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இதன்பிறகு களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இரண்டாவது தேநீர் இடைவேளைக்கு பிறகு விக்கெட்டுகளை மளமளவென இழந்த அவுஸ்ரேலியா அணி, 94 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றது.

இன்றைய ஆட்ட நேர முடிவில், மிட்செல் ஸ்டாக் 57 ஓட்டங்களுடனும், ஹெசில்வுட் 1 ஓட்டமுடனும் களத்தில் இருந்தனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg