Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரியாவில் இரு ஜேர்மனியர்கள் துப்பாக்கிதாரிகளால் கடத்தல்

In ஐரோப்பா
Updated: 12:24 GMT, Feb 23, 2017 | Published: 12:24 GMT, Feb 23, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Risha
germang

ஆபிரிக்காவின் மத்திய-வடக்கு மாநிலமான கடுனாவில் தொல்பொருள் ஆய்வு தளமொன்றில் பணியாற்றிவந்த இரு ஜேர்மனியர்கள் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (புதன்கிழமை) காலை கடத்தப்பட்டுள்ளதாக கடுனா மாநில உதவி பொலிஸ் அத்தியட்சகர் இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த நபர்கள், தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்த இரு பெண்களை காட்டுப் பகுதியை நோக்கி அழைத்துச் சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்போது குறித்த ஜேர்மனியர்களை மீட்கும் வகையில் பின்தொடர்ந்த கிராமத்தவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், குறித்த சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆபிரிக்காவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கொடிய வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்ற நிலையில், இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் சாதாரணமான வகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg