Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் காணாமல்போனது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

In இலங்கை
Published: 14:44 GMT, Feb 23, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Ravivarman

வவுனியா – பாரதிபுரம், விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் வாழ்வதற்கு  அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் இதுவரை எந்தவொரு அரசியல்வாதிகளும் தங்களின் குறைகளை கேட்டறியவில்லையெனவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை வந்து சந்திப்பதாக  இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் ‘தொலைந்ததா தமிழ்த்தேசியம்?’, ‘தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எங்கே?’ , ‘எங்களுடைய வாக்கு இனிமேலும் உங்களுக்கு தேவைதானா?’ , ‘தமிழ் அரசியல்வாதிகளே உங்களை நம்பி வாக்களித்த எங்களுக்கு இதுவா தீர்வு’ என பல்வேறு பதாகைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.

DSC_0007 DSC_0003

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg