Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமலின் கோரிக்கை தொடர்பில் விரைவில் தீர்மானம்: சபாநாயகர்

In இலங்கை
Updated: 16:19 GMT, Feb 23, 2017 | Published: 16:19 GMT, Feb 23, 2017 |
0 Comments
1175
This post was written by : Vithushagan

தேசிய சுதந்திர முன்னணியின் கோரிக்கை தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசியசுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை தனியான குழுவினராக கருதுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன் வைத்த கோரிக்கை தொடர்பாவே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் தனியான கட்சியொன்றாக கருத்தில் கொள்ளமுடியாது என்றும், தனது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் ஒரு பிரிவு அல்ல என்று விமல் வீரவன்ச  கூறுவாராக இருந்தால் அவர்களை நாடாளுமன்றத்தில்  சுயாதீன குழு அங்கத்தவர்களாக கருதமுடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றைய தினம் சபை அமர்வில்  உரையாற்றும் போது கூட்டு எதிர்க்கட்சியுடன் இருந்த அனைத்து அரசியல் ஈடுபாடுகளையும் கைவிடுவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg