Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Published: 17:55 GMT, Feb 23, 2017 |
0 Comments
1353
icon_com
This post was written by : Vithushagan
CvWJX_DUIAA_0kK

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 5 பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில், பதில் நீதவான் வீ.ரி.சிவலிங்கம் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகஸ்தர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போதிலும், மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது, ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கி சூட்டுக்காயம் காணப்பட்டது.

இதனை அடுத்து, சம்பவ தினத்தன்று கடமையிலிருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg