Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பை கூட்டமைப்பு ஆர்வமுடன் ஆதரிப்பது ஏன்?

In இலங்கை
Updated: 05:44 GMT, Feb 24, 2017 | Published: 03:45 GMT, Feb 24, 2017 |
0 Comments
1121
This post was written by : Ravivarman

‘தனிநாட்டிற்கான தமது கோரிக்கையை பலப்படுத்தவே புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் வேலைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மும்முரமாக இருக்கின்றது’ என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“தேர்தல் காலப்பகுதியில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த அரசு தமிழ் தலைவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென பல தடவைகள் அரசிற்குச் சுட்டிக்காட்டியிருந்தோம்” எனவும் குறிப்பிட்டார்.

மேலும் புதிய அரசியலமைப்பு குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டால் அது வெற்றியிலோ அல்லது தோல்வியிலோ முடிந்தாலும் கூட்டமைப்பிற்குச் சாதகமாகவே அமையும். இது நாட்டினது தேசிய பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் பாதகத்தை ஏற்படுத்துமெனவும் சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg