Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிம் ஜொங்-நம்மின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட விஷம் கண்டறியப்பட்டது

In உலகம்
Updated: 04:59 GMT, Feb 24, 2017 | Published: 04:25 GMT, Feb 24, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Elakkiya
_94789324_mediaitem94789323

வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் ஜொங்-நம், நரம்பினை தாக்கும் அதிக நச்சுத்தன்மை கொண்ட விஷத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது. இது குறித்து மலேசியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள நச்சுயியல் அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுத மருந்தாக ஐக்கிய நாடுகள் சபையினால் வகைப்படுத்தப்பட்டுள்ள வி.எக்ஸ் வகை விஷத்தினை கொண்டே கிம் ஜொங்- நம் கொல்லப்பட்டுள்ளதாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம் ஜொங் நம்மின் கொலையுடன் வடகொரிய அரசுக்கு தொடர்பற்ற போதிலும்,  வடகொரியர்கள் இதில் தொடர்புபட்டிருப்பதாக மலேசியா தெரிவித்துள்ளது.

கிம் ஜொங்-நம் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் விஷத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg