Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ்: செவஸ்தோவா-ஸ்விடோலினா ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி

In டெனிஸ்
Updated: 05:05 GMT, Feb 24, 2017 | Published: 04:40 GMT, Feb 24, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Anojkiyan
Anastasija+Sevastova+2016+Open+Day+7+r4hy_dCVP_Ml

டுபாயில் நடைபெற்றுவரும் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின், நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதியில் அனஸ்டசிஜா செவஸ்தோவா, எலினா ஸ்விடோலினா ஆகியோர் அரைஇறுதியை எட்டினர்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற முதல் காலிறுதியில் லாத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்தோவா, சீனாவின் குயாங் வாங்கை எதிர்கொண்டார். இதில், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வாங்கை வீழ்த்தி செவஸ்தோவா, அரைஇறுதியை எட்டினார்.

மற்றொரு போட்டியில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, அமெரிக்காவின் லாரென் டேவிசை சந்தித்தார். இதில், ஸ்விடோலினா 6-0, 6-4 என்ற நேர் செட்டில், டேவிசை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg