Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவெறியை வெளிப்படுத்தும் ஒலாதே மதுபானசாலை துப்பாக்கிச்சூடு: இந்தியர் மரணம்

In
Updated: 05:49 GMT, Feb 24, 2017 | Published: 05:34 GMT, Feb 24, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Elakkiya
_94823376_purinton_624ap

அமெரிக்காவின் கன்சாஸ்  மாநிலத்தின் ஒலாதே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிறவெறியும் இனவெறியும் அமெரிக்காவில் தலைதூக்கியுள்ளது என்பதை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஒலாதே பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. இந்த சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.

ஒலாதே பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக பணியாற்றும் இந்தியரான 32 வயதுடைய ஸ்ரீனிவாஸ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

மதுபானசாலையில் அமர்ந்திருந்த இந்தியர்களை நோக்கி, ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி துப்பாக்கிதாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஸ்ரீனிவாஸை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் அலோக் மடசனி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதுபோன்று துப்பாக்கி சூட்டை தடுக்க முயன்ற இயன் கிரில்லாட் என்பவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டை நடத்திய 51 வயதுடைய ஆடம் புரின்டன் என்பவர் ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மிசோரி மதுபானசாலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg