Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெஸியின் எதிர்காலம் தொடர்பில் அவரே முடிவெடுப்பார் என்கிறார் பயிற்சியாளர்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:44 GMT, Feb 24, 2017 | Published: 05:43 GMT, Feb 24, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Anojkiyan
lionel-messi-barcelona-leganes-laliga-19022017_6lig4wtx7kki1hfn1s2za36c0

ஸ்பெயின் முன்னணி கால்பந்து கழக அணியினான பார்சிலோனா அணிக்கு விளையாடிவரும், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லயனல் மெஸ்சி, பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததன் பின், வேறு அணியை தேர்ந்தெடுக்கும் முடிவை அவரே தான் எடுப்பார் என அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் எட்கார்டோ பவுசா தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. இதன் பின் அவர் பார்சிலோனா அணியிலேயே நீடிப்பார் என கூறப்படுகின்றது. இந்நிலையில், அவரது தீர்மானம் குறித்து அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் எட்கார்டோ பவுசா கூறுகையில்,

”பார்சிலோனா அணியில் மெஸ்சி எவ்வளவு சந்தோசமாக இருந்து வருகிறார் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. மெஸ்சி மகிழ்ச்சியாக இருக்கும்போது அது அவருடைய சிறந்த விளையாட்டிற்கு பயனளிக்கிறது. போட்டியின் போது சிறந்த செயற்திறனை வெளிப்படுத்துவதற்கு மனஉறுதி முக்கியமானது. ஒரு கால்பந்து வீரர் விளையாடும்போது, அணி வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. அவர் பார்சிலோனா, மென்செஸ்டர் அல்லது ஏதாவது ஒரு அணியை தேர்ந்தெடுக்கலாம். அதுகுறித்து அவர்தான் முடிவு எடுப்பார். நான் விரும்புவதெல்லாம் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதுதான். அவரைப் போன்ற வீரர்கள் தொடர்ந்து விளையாடத்தான் விரும்புவார்கள். ஒய்வெடுக்க விரும்பமாட்டார்கள்.

அர்ஜென்டினா அணிக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை, உலகின் சிறந்த வீரர் அவர் அல்ல, மிகவும் அபாயகரமான வீரர் இல்லை, மற்ற வீரர்களை ஒப்பிடுகையில் சிறந்தவர் அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் கடின முயற்சியுடன் அடுத்த உலகக்கோப்பையை வெல்ல முயற்சி எடுப்போம். அதன்மூலம் எந்தவொரு நேரத்திலும் அவர்தான் சிறந்த வீரர் என்பதை உருவாக்க முயற்சி செய்வோம்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg