Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரேபார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 17:24 GMT, Feb 23, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Kuruparan
w1

பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் இன்று வீசிய டோறிஸ் புயலினால் பெண் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் மேற்கு மிட்லான்ட் பகுதியில் இடம்பெற்றது.

மணிக்கு 94 மைல் வேகத்தில் வீசிய இந்தப்புயலின் தாக்கம் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் கடுமையானபோக்குவரத்துப்பாதிப்பு மற்றும் மின்சாரத்தடைகள் ஏற்பட்டிருந்தன.

w2

குடிவரவு மற்றும் குடியகல்வு தொடர்பாக பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களில் கடந்தவருடத்துடன்ஒப்பிடும்போது குடிவரவில் வீழ்ச்சிபதிவாகியுள்ளது. எனினும் அரசாங்கம் திட்டமிட்ட இலக்கை விட நிகர குடிவரவு இன்னமும்அதிகமாவேபதிவாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டில் சுமார் 3 லட்சம்பேர் குடிவரவாளர்களாக பதிவாகியநிலையில் கடந்தவருடம் அந்தத் தொகை 273,0000 ஆகப்பதிவாகியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகியவற்றிலிருந்து மட்டும் 2016 இல் 74,000 பேர் பிரித்தானியாவுக்குவந்துள்ளனர்.

w3

பரிஸ் நகரில் இன்று மாணவர்கள்நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் கண்ணீர்புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.

கடந்த 2 ஆந்திகதி கறுப்பின இளைஞர் ஒருவர் காவற்துறையினரால் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து  16 உயர்நிலைப்பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதே இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது

ஆர்பாட்டக்காரர்கள், குப்பைசேகரிப்பு கொள்கலன்களுக்கு தீயிடமுயன்ற போதே காவற்துறையினரின் கண்ணீர் புகைப்பிரயோகம்மேற்கொள்ளப் பட்டுள்ளது.

w4

வடஈராக்கிய நகரமான மொசூலில் உள்ள விமான நிலையப் பகுதியை தாம் கைப்பற்றியிருப்பதாக ஈராக்கிய படையினர்அறிவித்துள்ளனர்.

இதுவரை மொசூல் விமான நிலையபகுதி ஐ. எஸ் அமைப்பின் பிடியில் இருந்த நிலையில் இப்போது 4 மணிநேர சமருக்குப்பின்னர்ஈராக்கியபடையினர் பெற்ற இந்த வெற்றி முக்கியமானதாக நோக்கப்படுகிறது. தொடர்ந்தும் அந்தப்பகுதியில் மோதல்கள்இடம்பெறுகின்றன.

 

மொசூல் நகரத்தை நோக்கிய இந்த படைநகர்வை கடந்த ஒக்டோபர்மாதம் ஈராக்கியப் படையினர் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Edward Snowden

எட்வேட் ஸ்னோடனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய குற்றத்தில் தாம் பழிவாங்கப்படக்கூடுமென ஹொங்கொங்கில்அரசியல் தஞ்சம்கோரியுள்ள இலங்கையர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க தேசிய புலனாய்வுத் தகவல்களை கசிய விட்டதனூடாக 2013 ஆம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வேட்ஸ்னோடன்.

அவர் அமெரிக்காவிலிருந்து முதலில் ஹொங்கொங்குக்கு தப்பிச்சென்று பின்னா அங்கிருந்து ரஸ்யாவுக்கு சென்று அங்குஅரசியல்தஞ்சம்கோரியவர்.

எட்வேட் ஸ்னோடன் ஹொங்கொங்கில் தங்கியிருந்தபோது ஏற்கனவெ அங்கு அரசியல் தஞ்சம்கோரித்தங்கியிருந்தஇலங்கையர்களே( சிங்கள மக்கள்) அவருக்கு அடைக்கலம் வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் சிறிலங்கா புலனாய்வுத்துறை இதுகுறித்து விசாரணை செய்ய ஹொங்கொங்குக்கு செல்லவுள்ளதாக கூறப்படும்போதிலும் இந்தச் செய்திகளை சிறிலங்கா காவற்துறை மறுத்துள்ளது.

GERMANY-EUROPE-MIGRANTS

ஜேர்மனியில் அகதிதஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலஅளவு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னர்சராசரியாக 5 மாதங்களாக இருந்த இந்தக்காலப்பகுதி தற்போது சராசரியாக 8 மாதங்களுக்கு மேலான காலப்பகுதியாகநீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் சோமாலியா, துருக்கி, ரஸ்யா போன்ற நாடுகளிலிருந்து தஞ்சம்கோருவோருக்குரிய காலஎல்லை சராசரியாக 16மாதங்களுக்கு மேல்நீடிக்கப்பட்டுள்ளது. சிரிய அகதிகளுக்கு மட்டும் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலஅளவு 4மாதங்களாக்கபட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg