Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோசூல் விமான நிலையத்தை மீளக்கைப்பற்றியது ஈராக்கிய படை

In உலகம்
Updated: 09:55 GMT, Feb 24, 2017 | Published: 07:17 GMT, Feb 24, 2017 |
0 Comments
1242
icon_com
This post was written by : Elakkiya
irak

ஈராக்கிய படைத் தாக்குதலின் ஒரு முக்கிய கட்டமாக மோசூல் விமான நிலையம் மீளக் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஈராக்கிய பாதுகாப்பு படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மோசூல்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறிருக்க  மோசூலின் கிழக்குப் பகுதி  ஈராக்கிய அரச படையினால் கடந்த மாதம் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தை மீட்பதற்கான போர் மிகவும் அகோரமாக இடம்பெற்றது.

இதன்போது   ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் இராணுவத்தினர் மீது மோட்டார் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் நான்கு மணிநேரம் நீடித்த போராட்டத்தின் பின்னர் மோசூல் விமான நிலையத்தை ஈராக்கிய  இராணுவம் மீட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg