Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிரணி இல்லாமல் எடப்பாடி வெற்றி பெற்றார் ஸ்டாலின் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 11:50 GMT, Feb 24, 2017 | Published: 07:31 GMT, Feb 24, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Surenth

சட்ட மன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்ட வெற்றியானது, எதிரணி இல்லாத மைதானத்தில் விளையாடி வென்றதற்கு ஒப்பானதாகும்   என எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட மன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முறைபாடு செய்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் மிகப் பெரிய வன்முறை நடைபெற்றது. வெளியில் இருந்த பொலிஸார் சட்ட மன்ற கட்டடத்திற்குள் வந்து தி.மு.கவின் 89 உறுப்பினர்களை வெளியேற்றினர்.

அவையை வழி நடத்திய சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும் சட்டத்திற்கு முரணானகவும் நடந்துகொண்டார். இது தொடர்பில் குடியரசு தலைவரிடம் நாங்கள் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.

நம்பிக்கை வாக்கெடுப்பை இரகசியமாக நடத்துவது தொடர்பிலும் நாம் வலியுறுத்தியுள்ளோம். அத்தோடு வாக்கெடுப்பை மீண்டும் நடத்துவதுற்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது மைதானத்தில் எதிரணி என்று ஒன்று இல்லாமல் போட்டியில் பங்கு பற்றி விளையாடி வெற்றி பெற்றது போன்றது.

எனவே சட்ட மன்றத்தில் தி.மு.க உட்பட்ட எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசு தலைவரிடம் கேட்டுகொண்டுள்ளோம்.

அதற்கு குடியரசு தலைவரும் முறையான விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்” என எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg