Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண் மீட்கும் வடக்கு மக்களின் போராட்டக் குரல் நாடாளுமன்றில் ஓங்கி ஒலித்தது

In இலங்கை
Published: 07:49 GMT, Feb 24, 2017 |
0 Comments
1841
icon_com
This post was written by : Sujitharan

வடக்கில் தமது சொந்த நிலங்களை மீட்க மக்கள் போராடி வரும் நிலையில், அதன் எதிரொலி நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் ஓங்கி ஒலித்தது.

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தம், தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் காணி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

நாடாளுமன்றில், நேற்று நடைபெற்ற காணிக் கொள்முதல் ஒழுக்க விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும், இந்த ஆதரவுக் குரல்கள் உரக்க ஒலித்தன.

இதன்போது, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள், அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், கோரப்பட்டது.

போராட்டங்கள் தமிழர் பிரதேசத்தில் நடத்தப்படுவதால் அரசாங்கம் பாராமுகம் காட்டுகிறதா? எனக் கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள், சிங்கள மக்கள் இவ்வாறு போராட்டம் நடத்தியிருந்தால் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பார்களா? என்றும் கேட்டுக் கொண்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg