Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய சமாதான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் மீள ஆரம்பம்

In உலகம்
Published: 08:16 GMT, Feb 24, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Elakkiya

உள்நாட்டு போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சிதைவடைந்துவரும் சிரியா தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் நேற்று (வியாழக்கிழமை) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சிரிய அரச பிரதிநிதிகள் மற்றும் எதிர்தரப்பு பிரதிநிதிகளுடன் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் ஸ்ராஃபான் டி மிஸ்ருரா தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினார்.

இதன்போது சிரியாவுக்கான ஐ.நா தூதுவர் பசர் அல் ஜஃபாரி தலைமையில் சிரிய அரச பிரதிநிதிகளும், சிரிய எதிர்க்கட்சி குழுக்களின் ஒன்றான தேசிய கூட்டணியின் மூத்த உறுப்பினர் நாஸர் அல் ஹரிரி தலைமையில் சிரிய எதிர்தரப்பு பேச்சுவார்த்தை குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

சிரிய சமாதான பேச்சுவார்த்தைக்காக இருதரப்பிலிருந்தும் மொத்தாக 22 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அத்துடன் ஐ.நா பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச சிரிய ஆதரவு குழுவினரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து  கருத்து தெரிவித்த சிரியாவுக்கான சீனாவின் சிறப்பு தூதுவர் Xie Xiaoyan ‘அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளுடன் முடிந்தவரை பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நான் திட்டமிட்டுள்ளேன். அனைத்து கட்சிகளுடனும் நாம் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்த முடியும். ஏனெனில் சீனா நீதியை நிலைநிறுத்தும் ஒரு நாடு’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த சிரியாவுக்கான ஐ.நா சிறப்பு தூதுவர் ஸ்ரஃபான் டி மிஸ்ருரா, ‘ இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் சிறந்த தீர்வு கிடைக்கும் என்று பல்லாயிரக்கணக்கானோர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனை உதாசீனம் செய்துவிட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg