Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்: தீபா

In இந்தியா
Updated: 09:56 GMT, Feb 24, 2017 | Published: 08:22 GMT, Feb 24, 2017 |
0 Comments
1292
icon_com
This post was written by : Surenth
deepa

விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் எனவும் தனது அரசியல் பயணம் ஆரம்பமாகி விட்டத்தாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று (வெள்ளிக்கிழமை) தனது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை தொண்டர்கள் மத்தியில் வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த தீபா, “அம்மாவின் நல்லாசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அவரது நல்லாசியைப் பெற்று இன்று முதல் தீவிர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்.

நாம் எமது உரிமைகளையும் உடமைகளையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற அம்மாவின் வழியைப் பின் தொடர்ந்து நமது இலட்சியப் பாதையை வகுத்து வெற்றி பெறுவோம்.

எல்லோரது கபடமான நாடகங்களும் விரைவில் வெளிவரும் என்பது உண்மை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு மக்களுக்காக பணியாற்றுபவர்கள் யார் என்று மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்.

நாம் ஆரம்பித்துள்ள இந்த அமைப்பின் மூலம் மக்கள் பணியாற்றி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இரட்டை இலை சின்னமான அ.தி.மு.க வை விரைவில் கைப்பற்றுவேன்” எனவும் அவர்  உறுதிமொழி வழங்கினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg