Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடிமட்ட தொண்டனின் கையில் ஆட்சி வரும் வரை தர்ம யுத்தம் தொடரும்: பன்னீர்செல்வம் சூளுரை

In இந்தியா
Updated: 09:16 GMT, Feb 24, 2017 | Published: 08:44 GMT, Feb 24, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Surenth
o-panneerselvam

சாதாரண தொண்டனின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் வரையில் தர்ம யுத்தம் தொடரும் எனவும் அந்த காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்.கே நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர். அதன்படி நாமும் எமது பயணத்தை தொடர வேண்டும். தர்ம யுத்தங்கள் வெற்றி அடைந்ததாகத்தான் வரலாறுகள் உள்ளது. அதுபோலவே நான் ஆரம்பித்துள்ள தர்ம யுத்தமும் என்றோ ஒரு நாள் வெற்றி பெரும். சாதாரணமான ஒரு தொண்டனின் ஆட்சி தமிழகத்தில் வரும் வரையில் தர்ம யுத்தம் தொடரும்.

முன்னாள் முதலமைச்சரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நான் முற்பட்ட போது தான் எனது பதவிக்கு சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டது. எது எப்படியோ ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சி ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு அப்பாற்பட்டது. அ.தி.மு.க தற்போது ஒரு குடும்பத்தின் கையில் சிக்குண்டுள்ளது. கட்சியை மீட்க வேண்டும்”எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg