Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டங்கள்

In இலங்கை
Published: 09:08 GMT, Feb 24, 2017 |
0 Comments
1431
icon_com
This post was written by : Ravivarman

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மற்றும் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவை, காத்தான்குடி அரசியல்களம் ஆகிய அமைப்புக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடாத்தியிருந்தன.

‘எங்கு பிரிவு கண்டோமோ அங்கிருந்து ஆரம்பிப்போம்’ ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’, ‘நல்லாட்சி அரசாங்கத்தில் எமது நிலம் எமக்கு வேண்டும்’, ‘அரசே பூர்வீக நிலத்தில் குடியேறி வாழ விடு’ ‘கேப்பாப்பிலவு மக்களின் வாழ்விடங்கள் எந்த நிபந்தனையும் இன்றி வழங்கப்பட வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு மக்கள் குறித்த பேரணியில் கலந்துக் கொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக காணாமல் ஆக்கப்பட்டோர், மீள்குடியேற்றம் மற்றும் காணிவிடுவிப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கிய தொடர்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதுடன் அவற்றிற்கான ஆதரவுகள் அதிகரித்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

001 002 003

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg