Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய நாடாளுமன்றில் மனு கையளிக்கவுள்ளார் ஆன் கிளொய்ட்

In
Updated: 09:05 GMT, Feb 24, 2017 | Published: 09:04 GMT, Feb 24, 2017 |
0 Comments
1363
icon_com
This post was written by : Sylviya
11

பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மனுவொன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றமையின் பின்னர், அது தொடர்பில் வாக்களிக்கும் உரிமை பிரித்தானிய மக்களுக்கு எற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என, ஆன் கிளொய்ட் (Ann Clwyd) என அழைக்கப்படும் குறித்த வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானிய பிரஜைகள் மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பான விதியின் 227 ஆவது சரத்திற்கு அமைய, எந்தவொரு நாட்டுப் பிரஜையும் ஐரோப்பிய நாடாளுமன்றில் மனு கையளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே குறித்த வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்குறித்த மனுவை கையளிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

11 - 1
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg