Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி

In சினிமா
Updated: 16:48 GMT, Feb 24, 2017 | Published: 16:48 GMT, Feb 24, 2017 |
0 Comments
1535
This post was written by : Vithushagan

கார்த்தி நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்று படித்த கார்த்தி நாடு திரும்பிய பிறகு இயக்குனர் ஆக ஆசைப்பட்டு உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இந்நிலையில் தான் அவர் அமீரின் பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருந்தார்.

சினிமாவில் தனது 10 வருட நிறைவை முன்னிட்டு தன்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

’பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பருத்திவீரன் வெளியானது. அதில் இருந்து நீங்கள் அனைவரும் என் மீது பாசம் வைத்துள்ளீர்கள்.

ஏற்றம்இ இறக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து என் வாழ்க்கையை அழகாக ஆக்கியுள்ளீர்கள். உங்களின் அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தொடர்ந்து நான் கடினமாக உழைப்பேன்’ என குறுப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg