Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவ சதிப் புரட்சியை தொடர்ந்து துருக்கி இராஜதந்திரிகள் ஜேர்மனியில் தஞ்சம்

In ஐரோப்பா
Updated: 13:21 GMT, Feb 24, 2017 | Published: 11:33 GMT, Feb 24, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Elakkiya
_94828237_turkeyerdbannerafp

துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியின் பின்னர் துருக்கி இராஜதந்திரிகளுக்குரிய கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களிடமிருந்து 136 புகலிட கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

மேற்படி புகலிடக் கோரிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்மனிய ஊடகம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது.

எனினும் இவ்வாறு ஜேர்மனியில் புகலிட கோரிக்கை  விடுத்துள்ள துருக்கிய இராஜதந்திரிகள் குறித்து ஜேர்மன் உள்துறை அமைச்சு எவ்வித அடையாளங்களையும் வெளியிடவில்லை.

அதேவேளை மேலும் இரண்டு துருக்கிய இராணுவ வீரர்கள் கிரேக்கத்தில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரும் இராணுவ தளபதிகளாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கும் துருக்கியில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுவதாகவும் மேற்படி ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க எந்தவொரு துருக்கி இராணுவ அதிகாரிகளுக்கும் அடைக்கலம் வழங்க கூடாது என ஜேர்மனியிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg