Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்து சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 12:04 GMT, Feb 24, 2017 | Published: 12:03 GMT, Feb 24, 2017 |
0 Comments
1080
icon_com
This post was written by : Risha
maithripala-sirisena-13-july-15-prz-media

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான குடியேற்றவாசிகளின் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, சட்டபூர்வமாக வருகைதரும் குடியேற்றவாசிகள் நாட்டுக்கு ஆசீர்வாதம். ஆனால், சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டில் சுகாதார, சமூக, அரசியல் பிரச்சினைகள் பலவற்றை ஏற்படுத்துகின்றனர்.

எனவே குடியேற்றவாசிகள் சுகாதாரம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg