Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகள் ரொறன்ரோவுக்கு செல்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்

In கனடா
Published: 12:32 GMT, Feb 24, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Sylviya
20

கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் தற்போது துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மனிடோபா மற்றும் கியூபெக்கிற்கு செல்லும் குடியேற்றவாசிகள் ரொறன்ரோவிற்கு செல்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த கனேடிய அதிகாரிகள் சிலர், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரொறன்ரோ அதிகாரிகள் இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து அதிகளவான குடியேற்றவாசிகள் ரொறன்ரோவை வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அகதிகள் மற்றும் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கு கனடாவில் இருப்பிடம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறித்த அறிவிப்பின் பின்னரே கடனாவுக்கு செல்லும் குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg