Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடகர் விஜய் யேசுதாஸ் – இயக்குநர் இமயம் பாரதிராஜா இணையும் “படைவீரன்”

In சினிமா
Updated: 12:28 GMT, Feb 24, 2017 | Published: 12:26 GMT, Feb 24, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : S.K.Guna
Padai veeran 2

சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸின் இளைய புதல்வர் பாடகர் விஜய் யேசுதாஸ் “படைவீரன்” படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார்.

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்…அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமே படைவீரன் படத்தின் கதையாகும்.

இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

மேலும் “கல்லூரி” அகில், கலையரசன், இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதா பாரதி, இயக்குநர் விஜய்பாலாஜி, நித்தீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து, “பிச்சைக்காரன்” சுரேஷ் ஏகா, திண்டுக்கல் அலேக்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கடல், ஓ காதல் கண்மணி படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காஞ்சனா 2, நெடுஞ்சாலை படங்களியல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசைமைத்துள்ளார்.
Padai veeran 1

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg