Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுத்துறை கடலில் விபத்திற்குள்ளான படகை செலுத்தியவர் கைது

In
Updated: 12:50 GMT, Feb 24, 2017 | Published: 12:50 GMT, Feb 24, 2017 |
0 Comments
1069
icon_com
This post was written by : Vithushagan
download

களுத்துறை  கட்டுகுருந்த கடலில் விபத்திற்குள்ளான படகை செலுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த படகை செலுத்திச் சென்ற பேருவளை, போகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் நேற்று இரவு தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் இன்று (வெள்ளிக்கிழமை) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பேருவளையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த படகு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்தனர்.

அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே குறித்த விபத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg