Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏலத்திற்கு வருகிறது ராஜபக்ஷேக்களின் சொத்துக்கள்

In இலங்கை
Updated: 13:15 GMT, Feb 24, 2017 | Published: 13:10 GMT, Feb 24, 2017 |
0 Comments
1564
This post was written by : Risha

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையிலுள்ள 16 ஏக்கர் காணி நீதிமன்ற உத்தரவின்படி எதிர்வரும் 29ஆம் திகதி ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு சொந்தமானதென நம்பப்படும் காணியே இவ்வாறு ஏலமிடப்படவுள்ளது. இக்காணிக்கான அடிப்படை தொகையாக மதிப்பீட்டு திணைக்களத்தினால் 208 மில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள உரிமையாளரும் இக்காணி தமது இல்லையென தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மல்வானையிலுள்ள வீட்டுடன் கூடிய 16 ஏக்கர் காணியை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு பூகொடை நீதவான் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதற்கமைய குறித்த காணி ஏலமிடப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg