Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டம் நிறைவேற்று அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டு பின்னணியில் மஹிந்தவின் சூத்திரம்: டலஸ்

In இலங்கை
Updated: 05:23 GMT, Feb 25, 2017 | Published: 02:08 GMT, Feb 25, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Anojkiyan
Dullas-Alahapperuma-720x480

சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணியை கண்டறிந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் சூத்திரத்தையும் கண்டுகொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சைட்டம் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சைட்டம் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அமைதி காக்கிறது. எனினும் குறித்த சம்பவத்தின் பின்னணியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கமானது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு முன்வைக்காமல் காலம் தாழ்த்துகிறது. காலம் தாழ்த்துவதன் மூலம் அப்பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறது. ஆகவே எந்தவொரு பிரச்சினைக்கும் நேரடியாக உரிய நேரத்தில் தீர்வு முன்வைப்பதாக இல்லை.

மேலும், சைட்டம் விவகாரத்தை முன்னைய ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை எனக்கூறி அரசாங்கம் அமைதியாக இருந்துவிட முடியாது. சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள், இலங்கை மருத்துவ சபையில் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கு தகுதியுடையவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஓரிரு தினங்களில், சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg