Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவை அச்சுறுத்துகிறது H7N9 வைரஸ்: பெப்ரவரியில் மாத்திரம் 7 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 05:12 GMT, Feb 25, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Sylviya

சீனாவில் அதி தீவிரமாக பரவிய H7N9 வைரஸ் தொற்றினால் இம்மாதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ளது என இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீனாவின் சுகாதார அமைப்புக்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளன.

குறித்த தொற்று கோழிகளிடம் இருந்தே மனிதனுக்கு தொற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த தொற்று மீண்டும் பரவக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக சீன சுகாதார மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த தொற்றால் பாதிக்கப்பட்ட சீன மாகாணங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சீனாவின் NHFPC அமைப்பு மற்றும் விவசாய அமைச்சகம் ஆகியன புதிய ஏழு குழுக்களை நியமிக்கவுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த மாதம் சீனாவின் ஃபுஜியான், யுனான், மற்றும் ஹனான் ஆகிய மாகாணங்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 79 எனவும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129 எனவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg