Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநில கிரிக்கட் சங்கங்களுக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிரடி உத்தரவு

In கிாிக்கட்
Updated: 05:44 GMT, Feb 25, 2017 | Published: 05:44 GMT, Feb 25, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Elakkiya
BCCI

லோதா குழுவின் பரிந்துரைகளை ஏற்பதாக உறுதிப்பத்திரம் வழங்க வேண்டும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை மாநில கிரிக்கட் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த உறுதிப்பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட லோதா குழுவினால் பரிந்துரைகள் செய்யப்பட்டது. லோதா குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில் லோதா குழுவின் பரிந்துரைகள் சிலவற்றை மாநில கிரிக்கட் சங்கங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் அதனை செயற்படுத்துவதில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு தாமதங்கள் ஏற்படுகின்றது.

இத்தகைய தாமதங்களால் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து அனுராத் தாகூரும் செயலாளர் பதவியிலிருந்து அஜய் ஷிர்கேயும் உச்ச நீதிமன்றத்தினால் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுடன் நகரும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை சவால்களை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக மாநில கிரிக்கட் சங்கங்களுக்கு மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg