Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணி விடயங்களில் நல்லாட்சி அரசாங்கம் பாராமுகமாக இருப்பது எந்த வகையில் நியாயம்?

In இலங்கை
Published: 06:04 GMT, Feb 25, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Anojkiyan

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கமர்த்திய வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் காணி விடயங்களில், நல்லாட்சி அரசாங்கம் பாராமுகமாக இருப்பது எந்த வகையில் நியாயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த புதன்கிழமை, மட்டக்களப்பு களுதாவளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் சம்பவத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

வெடிகளை வைத்து, துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு, புலிப்பூச்சாண்டி காட்டி மக்களை மிரட்ட முடியாது. இவ்வாறு சதி செய்கின்றார்களா என்று எண்ணத் தோன்றுவதாக சமகால நிகழ்வுகள் அமைந்து விட்டிருக்கின்றன.

நல்லாட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இவ்வாறான நல்ல சூழலை குழப்பும் தீய சக்திகளின் செயற்பாடுகள்தான் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குக் காரணம் என கருதவேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் காணி விடயங்களில் பல பிரச்சினைகள் உள்ளன. அந்த வகையில் கடந்த 25 நாட்களாக கேப்பாப்பிலவு மக்கள் தமது காணியை விடுவிக்கக்கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கமர்த்தியவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள். நல்லாட்சி என்று சொல்லப்படுமாயின் அரசாங்கம், ஏன் இந்த விடயத்தில் கண்மூடித்தனமாக உள்ளது. இது எந்த வகையில் நியாயமாகும்? என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg