Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத் தமிழ் சமூகத்தின் நலன் கருதி இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும்: ஸ்ரீதரன் வேண்டுக்கோள்

In இலங்கை
Updated: 06:25 GMT, Feb 25, 2017 | Published: 06:25 GMT, Feb 25, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Anojkiyan
crop

மலையகத் தமிழ் சமூகத்தின் நலன் கருதி இளைஞர்கள் ஒற்றுபட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

‘யுத் கொட் டெலன்ட்’ கருத்திட்டத்தின் கீழ் போஹவத்தை, செம்மொழி இளைஞர் கழகத்தினால் திம்புள்ள தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகம், பொது மேடை என்பனவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போராட்டத்தில் ஒன்றிணைந்த இளைஞர்களின் சக்தி எத்தகையது என்பதை இன்று முழு உலகமும் புரிந்து கொண்டுள்ளது. எனவே இளைஞர்களின் சக்தியை நாம் நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போது சமூகத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். இன்று இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். செம்மொழி மன்றத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நூலகத்தின் மூலமாக திம்புள்ள தோட்ட மக்கள் முழுமையான பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு இணையத்தள வசதிகளுடன் கூடிய நூலகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய நூலகங்களையும் நாம் எதிர்காலத்தில் மலையகத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நூலகத்திற்கு எனது நிதியின் ஊடாக நூல்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். எனவே இளைஞர் சமூகத்திற்கு நாம் உரிய வகையில் ஒத்துழைப்பு வழங்கி அவர்களின் திறமைகளுக்குக் களம் அமைத்துக்கொடுக்க வேண்டும்’ என கூறினார்.

will o
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg