Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் யுத்த பாதிப்பிலிருந்து மீண்ட மக்களுக்கான நலத்திட்டங்கள்!

In இலங்கை
Updated: 07:23 GMT, Feb 25, 2017 | Published: 06:47 GMT, Feb 25, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Anojkiyan
batticola123

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தங்களது தொழில்களை இழந்த சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கல், புனர்வாழ்வு அமைச்சினால் புனரமைப்புச் செய்யப்பட்ட கிராமம் கையளிப்பு ஆகிய நிகழ்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வு நாளை முதல் திங்கட்கிழமை வரை, காலை 9.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையில், மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என். பத்மநாதன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 30 பேர், சொத்து இழப்பினை எதிர் கொண்ட அரச உத்தியோகத்தர்கள் 35 பேர், பாதிக்கப்பட்ட 10 வணக்கத் தலங்கள், 30 பொதுச் சொத்து அழிவுகளுக்குமாக 105 பேருக்கு 75 லட்சத்து 43ஆயிரத்து 603 ரூபாய்க்கான நட்ட ஈட்டுக் காசோலைகள் வழங்கப்படவுள்ளன. அதேநேரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தில் சுயதொழில், சுயதொழில் பயிற்சிகள், வீடுகள் அமைத்தல், கைத்தொழிலில் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக 521 பேருக்கு 7 கோடியே 4 லட்சத்து 82 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுகளை அடுத்து புனர்வாழ்வு அமைச்சின் நிதியில் 7.5 மில்லியன் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட வவுணதீவு நெல்லூர் கிராமம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இதில், பல்தேவைக்கட்டடம், வீதி புனரமப்பு, 2 கல்வெட்டுகள் அமைத்தல், நீர்ப்பாசன வாய்க்கால் புனரமைப்பு, சிறுவர் பூங்கா, முன்பள்ளி புனரமைப்பு, விளையாட்டு மைதானம் புனரமைத்தல் உள்ளிட்ட 8 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg