Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலிய கடலோர காவற்படையினரால் 2750 குடியேற்றவாசிகள் பாதுகாப்பாக மீட்பு

In ஐரோப்பா
Published: 07:04 GMT, Feb 25, 2017 |
0 Comments
1249
icon_com
This post was written by : Sylviya

இத்தாலிய கடலோர காவற்படையினரால் கடந்த நான்கு நாட்களுக்குள் சுமார் 2750 குடியேற்றவாசிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவுக்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதே வேளை கடந்த நான்கு நாட்களுக்குள் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகளின் மொத்த தொகையையும் விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட ஐந்து வெவ்வேறான மீட்பு நடவடிக்கைகளின் போது சுமார் 250 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டதாகவும் கடலோர காவற்படையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வருட ஆரம்பத்திலிருந்து கடற்பயணம் மூலம் இத்தாலியை வந்தடைந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 10,700 என இத்தாலியின் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த குடியேற்றவாசிகளின் வருகையை கட்டுப்படுத்தும் பொருட்டு இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன லிபியாவில் உள்ள குடியேற்றவாசிகளின் முகாம்களுக்கு நிதியுதவி வழங்க தீர்மானம் மேற்கொண்டன.

அத்துடன் ஆட்கடத்தல்காரர்களை மடக்கிப் பிடிக்கும் வகையில் லிபிய கடற்படை வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, மத்தியதரைக்கடல் ஊடாக கடந்த வருடம் இத்தாலிக்கு வந்த குடியேற்றவாசிகளின் மொத்த எண்ணிக்கை 181,000 எனவும் அவ்வாறு வரும் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg