Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தோட்ட நிர்வாகங்களுடன் இ.தொ.கா பேச்சுவார்த்தை!

In இலங்கை
Updated: 07:36 GMT, Feb 25, 2017 | Published: 07:35 GMT, Feb 25, 2017 |
0 Comments
1170
This post was written by : Anojkiyan

தோட்ட நிர்வாகங்களுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விரைவில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலும், கைச்சாத்திடப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக இ.தொ.கா பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நானுஓயா கிளாசோ ஆடிவன் பிரிவில் சனசமூக மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

கூட்டு ஒப்பந்த விதிமுறைகளை மீறி செயற்படும் தோட்ட அதிகாரிகள் எமக்கு வேண்டாம். காரணம் இவர்கள் தொழில் திணைக்கள சட்டங்களை மீறி செயல்படுகின்றனர். புதிய சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது போல் தோட்ட தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் கிடைக்கவில்லை. ஆனால் ஒப்பந்த கூட்டு ஒப்பந்த மீறல்களை தோட்ட நிர்வாகங்கள் அவர்களின் அதிகாரிகளுடன் மீறி வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஆகையால் எதிர்வரும் தினங்களில் ஒரு தினத்தை இ.தொ.கா தொழிலமைச்சருடன் கேட்டுள்ளது, இதன் அடிப்படையில் திகதி ஒதுக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் சம்மந்தம் தொடர்பிலும், கைச்சாத்திடப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அதேவேளையில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் திறன் அபிவிருத்தி கொடுப்பனவான 140 ரூபாயை வழங்காத தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கப்படும்.

எம்மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மை காரணத்தினால் அனைத்து உரிமைகளையும் பெறுவதில் நாம் சிதரப்பட்டு காண்கின்றோம். மலையக அபிவிருத்தி திட்டத்திற்கு விதையிட்டது இ.தொ.கா தான். என கூறினார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், கணபதி கனகராஜ், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

tho 2

tho 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg